கொழும்பில் இயங்கிவந்த பல நிறுவனங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
#SriLanka
#Colombo
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Dengue
Thamilini
1 year ago
டெங்கு நுளம்பு பரவும் வகையில் இயங்கி வந்த 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் மட்டும் 6,500 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சமீபகாலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தற்போது நிலவிய சீரற்ற வானிலை டெங்கு நுளம்புகள் பெருக்கத்திற்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.