தொழில்வாய்வு இல்லாமல் கனடாவிற்கு புலம்பெயரும் இளைஞர்கள்: கனடா தூதுவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

#SriLanka #Canada #Lanka4 #Ambassador
Mayoorikka
1 year ago
தொழில்வாய்வு இல்லாமல் கனடாவிற்கு புலம்பெயரும் இளைஞர்கள்: கனடா தூதுவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனடா தூதுவர் ரிக்வோல்ஸ் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாருக்கும் இடையில் கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இச்சந்திப்பு சமத்துவக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (11) காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 

 இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உரையாடிய விடயங்கள் யுத்தத்திற்கு பின்னராக காலப்பகுதியில் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்பட வேண்டிய நல்லிணக்கம் பற்றியும், முன்னாள் பேராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மீள கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தினோம். 

images/content-image/2023/01/1705054385.jpg

 குறிப்பாக இங்குபோதுமான தொழில் வாய்ப்புக்கள் இல்லாமையால் ஏராளமான இளைஞர் யுவதிகள் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தகொண்டிருக்கின்றார்கள்.

 எனவே அவர்கள் இங்கு தொழில்களை பெற்று வாழ்வதற்குரிய முதலீடுகளை மேற்கொண்டு தொழில் துறைகளை ஆரம்பிக்க கனடா முன்வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!