யாழில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மாத்திரம் சந்தித்த பிரித்தானிய இளவரசி! ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுப்பு

#SriLanka #Jaffna #Lanka4 #Britain #Visit
Mayoorikka
1 year ago
யாழில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மாத்திரம் சந்தித்த பிரித்தானிய இளவரசி!  ஊடகவியலாளர்களுக்கும்  அனுமதி  மறுப்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் செய்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கண்ட பிரித்தானிய இளவரசிஆன் மற்றும் அவரது கணவர் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தனர்

 இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன்  (YouTube Channel உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/01/1704976427.jpg

 யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இலங்கையின் பிரபல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை.

 மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசியின் வட மாகாணத்துக்கான முதல் அரச பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!