முள்ளியவளை வர்த்தக நிலையத்தில் தீவிபத்து : பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

#SriLanka #Mullaitivu #Lanka4 #fire #Tamilnews #sri lanka tamil news #lanka4Media #lanka4.com
Thamilini
1 year ago
முள்ளியவளை வர்த்தக நிலையத்தில் தீவிபத்து : பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று பகுதியில் உள்ள இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் இன்று (10.01) அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் வர்ததக நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!