அதிவேக நெடுஞ்சாலையில் பெண் படுகொலை - சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Arrest #Police #Murder #Highway
PriyaRam
1 year ago
அதிவேக நெடுஞ்சாலையில் பெண் படுகொலை - சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை மடபட ஜபுரலிய பகுதியைச் சேர்ந்த துலங்கலி அனுருத்திகா என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, தாக்கப்பட்டுள்ளார். 

இந்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர், தீவை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேக நபர் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!