இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய இளவரசி: யாழ் கண்டிக்கும் விஜயம்

#SriLanka #Jaffna #Airport #kandy #Britain #London #Visit
Mayoorikka
1 year ago
இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய இளவரசி: யாழ் கண்டிக்கும் விஜயம்

மூன்று நாள் விஜயமாக பிரித்தானிய இளவரசி ஹேனின் இன்று காலை (10) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 விசேட விமானத்தில் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஹேனினை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

 இந்த விஜயத்தின் போது இளவரசி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

 மேலும், அவர் நாட்டில் இருக்கும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!