ஆசானிக்கு முன்னரான மலையகம் ஆசானிக்கு பின்னரான மலையகம்!

#SriLanka #Lanka4 #Music #Malayagam
Soruban
1 year ago
ஆசானிக்கு முன்னரான மலையகம் ஆசானிக்கு பின்னரான மலையகம்!

யார் இந்த மலையக தமிழர்கள்' செழிப்பான மலையகத்தில் வறுமையில் தவிக்கும் இவர்களின் நிலை எப்போது மாறும், நாடற்றவர், ஒதுக்கப்பட்ட சமூகமாக இந்த மலையகம் ஏன் இப்போது அதிகம் பேசப்படுகிறது. யார் இந்த அசானி. 

அசானிக்கு முன் அசானிக்கு பின் மலையக தமிழர்கள் வாழ்ககை முறை பற்றி விரிவாக.

 யார் இந்த மலையக தமிழர் 1820 முதல் 1840 வரை இந்தியாவில் ஏற்பட்ட வறுமை மற்றும் பஞ்சத்தின் காரணமாக ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்கு பிரித்தானிய அரசு கைப்பற்றியது முதன் முதலாக இலங்கையில் கோப்பி பயிடுகை பேராதனையில் தொடங்கப்பட்டு பின் கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது. 

 கோப்பி பயிரிடுகையை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து படகு மூலம் வரவழைக்கப்பட்டவர்கள் இந்த 'மலையக தமிழர்கள்' ஆனால் நோய் தொற்று காரணமாக கோப்பி பயிரிடுகை மற்றும் அதன் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது.

 மீண்டும் 1840 - ல் ஜேம்ஸ் டைலர் என்பவரால் தேயிலை மற்றும் இரப்பர் பயிரிடுகை செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. 

 அந்நிய செலவாணியை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து மேலும் 4 இலட்சம் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். இருக்க இருப்பிடமின்றி இருந்த இவர்கள் கரடு முரடாக இருந்த மலையகங்களில் இருந்த லயன் குடியிருப்புக்களில்; 

தங்க வைக்கப்பட்டனர் அன்று தங்க வைக்கப்பட்ட இவர்களே இந்த 21 - ஆம் நூற்றாண்டிலும் அதே லயன் குடியிருப்புகளில் இருக்கும் 'மலையக வாழ் தமிழர்கள்' என்றும் 'இந்திய வம்சாவளி மக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 200 ஆண்டுகளாக முகவரி இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்; இலங்கை பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் இவர்களின் நிலை கடும் குளிர், மழை, காற்று இவற்றுக்கு மத்தியில் அட்டை கடி, பாம்பு, குழவி கொட்டு இவற்றையும் பாராமல் அயராது உழைக்கும் இவர்கள் இலங்கை பொருளாதரத்துக்கு பெரும் பங்காற்றுகின்றனர். 

 லயன் குடியிருப்புகளில் இவர்கள் முறையான கழிவறை, குடிநீர் வசதி மற்றும் முகவர் கூட இல்லாமல் எந்தவொரு கடிதமோ , தந்தியோ கிடைக்க பெற ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் இதற்குள் பல்கலை கழங்கள், வேலை வாய்ப்புகள், நீதிமன்ற கடிதங்கள் எல்லாம் காலதாமதமாகி விடும். வீட்டில் வசிக்கும் பல குடும்பங்கள் ஆனால் இவர்களுக்கு கிடைக்கப் பெறும் நிதி உதவியோ ஒன்று இதற்கு காரணம் தனி முகவரியின்மை இந்நிலை எப்போது மாறும்.

 யார் இந்த அசானி;

 அகில இலங்கையே போற்றி பேசும் அசானி யார் தெரியுமா? 

மலையக வாழ் தமிழர்கள் இருக்கும் இடமான கம்பளை மாவட்டத்தில் புசல்லாவ என்னும் ஊரில் நயபென்ன என்னும் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளை இவள் தனது பாடல் திறமை மூலம் அந்த ஊர்மக்கள் உதவியுடன் இந்தியா சென்று 'சரிகமப' என்னும்ZEE TAMIL இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியவள் முறையான இசைப் பயிற்சி பெறமாலே தனது பாடலை திறமையை வெளிப்படுத்திய சிறுமிக்குZEE TAMIL தொலைக்காட்சி அரிய வாய்ப்பை அளித்ததற்கு எங்கள் இலங்கை தமிழர்கள் மற்றும் மலையக வாழ் தமிழ்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை எம் LANKA4 news சார்பாக அறியத் தருகிறோம். 

வெற்றி பெற்றால் தான் வாழ்க்கை அல்ல தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைத்தால் அதுவே வெற்றிக்கு சமம். யார் என்று தெரியாத இந்த அசானி மலையகம் மற்றும் இலங்கை தமிழர்கள் எல்லோராலும் போற்றப்படுபவள் மற்றும் பேசப்படுபவள் இன்று இந்த அசானியால் நயபென்ன என்னும் சின்ன கிராமத்தை இலங்கை மக்களுக்கு வெளிச்சம் போட்டவள் இவள் தனக்கு கிடைத்த வெற்றி மற்றும் நிதிகளை தான் மட்டுமின்றி தனது ஊர் மக்களுக்கும் பெற்று தந்து சந்தோஷபடுபவள் இதே போல் எல்லாத் துறைகளிலும் மலையக தமிழர்கள் முன்னேறுகின்றனர். 

பல்கலைகழகங்கள் ஊடகங்கள், கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றிலும் வளர்ச்சி பெற்றவர்கள் இவர்கள். தமிழர் எங்கிருந்தாலும் அவர்களே தமிழர்களே என்ற பெருமையோடு 'மலையக தமிழரும் நம் தமிழர்களே' என்று பெருமை கொள்கிறது LANKA4 news

 முடிவுரை:-

 இன்று அசானியால் நாடே பேசும் இந்த மலையக தமிழர் அதாவது 'இந்திய வம்சாவளி மக்கள்' இலங்கை தமிழராகவும் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலுமபு என்று சொல்ல தகுதியுடைவர்கள் இவர்களின் இந்நிலை மாறும் மாற வேனும் அசானியை போல் இன்னொரு அசானியை உருவாக்குவோம் உதவி செய்வோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!