வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

#SriLanka #Vavuniya #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் . 

வவுனியா - மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது. 

இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்,  இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!