யாழ்.சங்குவேலியில் வன்முறைக் கும்பல் அராஜகம் - தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!

#SriLanka #Jaffna #Arrest #Police #Attack #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
யாழ்.சங்குவேலியில் வன்முறைக் கும்பல் அராஜகம் - தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!

யாழ்,சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சம்பவ தினமான நேற்று முன்தினம், குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று வீட்டின் கதவு, ஜன்னல், கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுகியுள்ளதுடன், அங்குள்ள பெறுமதியான பொருட்கள் பலவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர். 

images/content-image/1704792978.jpg

அத்துடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் தீயிட்டு கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார், தாக்குதல் மேற்கொண்ட ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!