தனது பேச்சால் கவரப்பட்ட மாணவியை நேரில் சென்று வாழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

#SriLanka #Trincomalee #Student #Parliament #Congratulations #Member #sanakkiyan #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
தனது பேச்சால் கவரப்பட்ட மாணவியை நேரில் சென்று வாழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

பாராளுமன்ற பேச்சால் கவரப்பட்ட திருகோணமலை மாணவியை நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராட்டியுள்ளார்.

மேலும் இந்த மாணவி தனது முன்மாதிரியாக நினைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

images/content-image/1704789774.jpg

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - 

வணக்கம் ஐயா,எனது பெயர் திவிஷா,நான் திருகோணமலையில் வாழ்கிறேன்.எனக்கு உங்களது உரை என்றால் மிகவும் பிடிக்கும்.நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை.உங்களை போல் வளர வேண்டும் என்பதே என் ஆசை,உங்களது நேர்மை மற்றும் உண்மையை நான் நேசிக்கிறேன்.

நீங்கள் பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் துணிச்சலாக பேசுகிறீர்.நீங்கள் இலங்கையிலேயே அச்சமற்ற , நேர்மையான , தைரியமான மற்றும் நியாயமான மனிதர்.உங்கள் ஆட்டோகிராப்(கையொப்பம்) தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

images/content-image/1704789787.jpg

மேலும் மாணவி திவிஷாவை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கடிதத்தை வாசித்து அதற்கான பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அதாவது,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திவிஷா,உங்களுடைய எதிர்காலத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று கூறி மாணவியின் விருப்பத்தை கையொப்பம் இட்டு நிறைவேற்றியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!