நடிகையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சாரதி கைது - சாரதி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

#SriLanka #Death #Arrest #Police #Actress #Sexual Abuse #Driver #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
நடிகையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சாரதி கைது - சாரதி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் நடிகைக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை பயண வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றின் ஒன்லைன் மூலம் கட்டுபெத்தவிலிருந்து முச்சக்கர வண்டியை நடிகை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுபெத்தவிலிருந்து பிலியந்தலை வழியாக ஜாலியகொடை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கடும் மழை காரணமாக செல்ல முடியாது என முச்சக்கரவண்டியை சாரதி நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து நடிகை அமர்ந்திருந்த பின் இருக்கைக்குச் சென்ற சாதி அவரது மார்பு பகுதியை தொட முயன்றதாக பொலிஸார் கூறுகின்றனர். இதனையடுத்து குறித்த நடிகை ஆட்டோவிலிருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பின் இருக்கையில் காணப்பட்ட நடிகையின் அடையாள அட்டை, வங்கி அட்டை, பணம் உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்களுடன் ஆட்டோ சாரதி தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகரை விசாரணைக்கு உட்படுத்திய போது, தான் அவ்வாறு அந்த நடிகையை அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 முச்சக்கர வண்டியில் இருந்து குதித்த நடிகைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் நடிகையுடன் கட்டுப்பெத்த பிரதேசத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் களுபோவில பகுதியில் வாடகை பயணத்தை முடித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!