யுக்திய சுற்றிவளைப்பு - மேலும் 950 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (08) முதல் இன்று (09) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 42 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு சந்தேக நபர்களிடம் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 68 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் விசேட அதிரடிப்படையினரும் கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பின்வருமாறு,
296 கிராம் ஹெரோயின்,
194 கிராம் ஐஸ்,
117 கிலோ 421 கிராம் கஞ்சா,
41,767 கஞ்சா செடிகள்,
48 கிலோ 140 கிராம் அபின் ,
01 கிலோ 86 கிராம் மாவா,
25 கிராம் தூள் ,
223 மாத்திரைகள்,
90 கிராம் ஹசீஷ்,
77 கிராம் மதன மோதகம்.