கறுப்பு ஆடையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்!

#SriLanka #Sri Lanka President #Parliament #taxes #Lanka4 #speaker #Member #Vat
Mayoorikka
1 year ago
கறுப்பு ஆடையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்!

இந்த ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது.

 எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.

 மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தமை விசேட அம்சமாகும்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!