ஒவ்வொரு அரசியல்வாதியும் விசித்திரக் கதைகளைச் சொல்லலாம் : நாமல் ராஜபக்ஷ!
ஒவ்வொரு அரசியல்வாதியும் விசித்திரக் கதைகளைச் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் உள்ள கொள்கைகளை தரை மட்டத்தில் நடைமுறைப்படுத்திய அரசியல் சக்தி எது என்பதை இந்நாட்டு மக்கள் கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இளம் அரசியல் தலைவருக்கு முதிர்ச்சியடைய இதுவே சிறந்த சந்தர்ப்பம் எனவும், எந்த தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலமான அரசியல் சக்தியாக பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சொந்த நலனுக்காக சிலர் கூட்டணியை மாற்றிக்கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்.
எல்லோரும் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்க முடியும். விசித்திரக் கதைகளைச் சொல்லலாம். 10,000 சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது நல்லாட்சி அரசாங்கம். வந்து அதிகப்படுத்திய சில நாட்களில், 10,000 உயர்த்தியதால் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக கூறினார்.