கனடாவுக்கு விசிட் விசாவில் சென்றவரின் உண்மையான சோகக் கதை!
கனடா விசிட் விசாவில் வாங்க இங்கே செட்டில் ஆகலாம் என்று எழுதப்படும் எல்லா பதிவுகளினதும் மறைமுக அர்த்தம் விசிட் விசா எடுத்து வந்து அசைலம்/ அகதி அந்தஸ்த்தை கோருங்கள் என்பதே. ஒரு காலத்தில் அகதி அந்தஸ்து கோருவது என்பது இலகுவாக இருந்தது. இப்போது அதெல்லாம் அவ்வளவு இலகுவானதல்ல.
குளிரில் நடுங்கி கூனிக்குறுகி , அதீத அழுத்தத்திற்கு உள்ளாகி பைத்தியம் பிடிச்சிடும். சொன்னால் நம்புங்கள், இந்த நாடுகளில் ஓரளவு சம்பளம் இல்லாது விட்டால் நீங்கள் படு மோசமான வாழ்க்கைதான் வாழ வேண்டும். அதைவிட நல்ல நிம்மதியான வாழ்க்கையை இலங்கையில் வாழ்ந்து விடலாம். நீங்கள் இங்கே வாழ்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதி பெறும் வரை நாடோடி போல் அடையாளத்தைத் தொலைத்து வாழ வேண்டும்.
அது மிகப்பெரிய கொடுமை. அங்கே நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட ஏஜென்சி காரனின் கதையை நம்பி கோடிகள் கொடுத்து இங்கே வந்து , இந்த குளிரில் தங்க நல்ல பாதுகாப்பான அறை கூட இல்லாமல் , வேலையும் இல்லாமல் அழுந்திக் கொண்டு இருப்பதை நேரடியாக காண்கிறேன். ஏதாவதொரு விசாவில் போய் இறங்கினால் சரி என்றுகொண்டு எந்த நாட்டுக்கும் போகாதீர்கள்.
உங்களால் மாதம் தவறாமல் வருமானம் வரக்கூடியளவு சம்பளம் எடுக்க கூடியளவு வேலை எடுக்கலாமா, அந்த வேலை மூலம் தங்குவதற்கான விசா கிடைக்குமா என்று அறிந்துகொண்டு வாருங்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், இங்கிலாந்தில் ஒரு பிள்ளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்த செலவு,
வீடு : 800 - 1200 கரண்ட் ,
தண்ணி பில்: 150- 250
கவுன்சில், டாக்ஸ் : 150- 250,
ஃபோன் பில் , பயண செலவு: 150
சாப்பாட்டு செலவு: 300- 500 கிட்டத்தட்ட மிகக்குறைந்த அடிப்படை செலவு என்று பார்த்தாலே மாதம் 1800 - 2000£ தேவை.
இது ஒரு பிள்ளை உள்ள குடும்பத்துக்கு தேவையான அடிப்படை செலவு. இதுவும் சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு . லண்டன் போன்ற பெரிய நகரம் என்றால் இன்னொரு 500 பவுண்ட் ஆவது அதிகம் தேவை. நிறையப்பேர் பராமரிப்பாளர் வேலைக்கு வருகிறார்கள். அவர்களது மாத சம்பளம் 1600 பவுண்ட்ஸ். எடுக்கிற சம்பளம் உங்கள் மாத செலவுக்கே போதாது. துணை ஏதாவது வேலை செய்தாலே மாத செலவை சமாளிக்க வேண்டும்.
பிள்ளையுடன் வருபவர்களுக்கு அதுவும் அவ்வளவு இலகு அல்ல. பிள்ளையை நேர்சரி அல்லது பிள்ளை பார்க்கும் இடத்தில் விட்டால் மாதம் 1000 பவுண்ட்ஸ் அதுக்கு போய்விடும் . அதனால் துணை இரவு நேர அல்லது வார இறுதி வேலைதான் செய்ய வேண்டும்.
அதனால் , இந்த நாடுகள் ஏதோ சொர்க்கம் கொட்டும் இடம் என எந்த திட்டமிடலும் இல்லாமல் வந்து இறங்காதீர்கள்.
குறிப்பாக இந்த விசிட் விசாவில் வாங்க என்ற உசுப்பேத்தல்களில் நம்பி ஏமாறாதீர்கள்.