அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கும் சுகாதார ஊழியர்கள்!
வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை வைத்திய அதிகாரிகளுக்கு வழங்காமைக்கு எதிராக அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (08.01) கூடிய அமைச்சர்கள் சபை மருத்துவ ஊழியர்களுக்கு 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த போதிலும், அது அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் நியாயமாக வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சுகாதார நிபுணர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் மருத்துவ நிபுணர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (09.01) காலை 8 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நீதி வழங்கப்படாவிடின் அனைத்து சுகாதார நிபுணர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.