டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த வோல்பேசியா நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Dengue
#lanka4Media
Thamilini
1 year ago
கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பிரதேசங்களில் நுளம்புகளை கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் தொற்றுள்ள நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இத்திட்டம் ஆராய்ச்சி மட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டத்தின் பல வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆராய்ச்சி மட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் கிடைக்கும் பெறுபேறுகளின் பிரகாரம் எதிர்காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.