யாழில் 86 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!
#SriLanka
#Jaffna
#Arrest
#Police
#drugs
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா, அபின் என்பன இன்று (08.01) அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதன் சந்தை மதிப்பு 86 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீத்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.