காணிகள் மூலம் வருமானத்தை ஈட்ட முற்படும் அரசு!
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை ஒதுக்குவதன்மூலம் அடுத்த 3 வருடங்களில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி இவ்வாறு விலக்கப்பட்டுள்ளது. இதன்படி, காணிகளை அப்புறப்படுத்துவதன் மூலம் இந்த வருடத்தில் மாத்திரம் 9 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் .பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இக்காணிகள் பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் அடிப்படையிலும் நீண்ட கால குத்தகை அடிப்படையிலும் திட்ட வாய்ப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.
இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ், மேல், தெற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.