மட்டக்களப்பில் கூட்டு வன்புணர்வுக்குள்ளான சிறுமி!

#SriLanka #Batticaloa #Arrest #Police #Sexual Abuse #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
மட்டக்களப்பில் கூட்டு வன்புணர்வுக்குள்ளான சிறுமி!

மட்டு. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவதினமான நேற்று முன்தினம் 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை 26 வயதுடைய நபரொருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், குறித்த நபரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர், பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!