வரி (TIN NUMBER) எண் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவது அவசியம்!
வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு சட்டம் அபராதம் விதிக்கும் என்று உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் குறிப்பிடுகிறது.
பிப்ரவரி முதல் திகதி முதல் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படாது என்றும், மக்கள் வரி எண்ணைப் பெற சில அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதன்பின், இதை பின்பற்றாதவர்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி எண்ணை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கியுள்ளதாகவும், வரி ஏய்ப்பவர்களுக்கு கடைசி முயற்சியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் துறையினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
எவ்வாறாயினும் சமூகத்தில் வரி எண் குறித்த தெளிவுப்படுத்தல்கள் அவசியம் என்றும், அதனை விளக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.