தொலைநோக்கு பார்வையற்ற அரசியல் கட்சிகள் - தேரர் விமர்சனம்!

#SriLanka #Election #Lanka4 #srilankan politics #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
தொலைநோக்கு பார்வையற்ற அரசியல் கட்சிகள் - தேரர் விமர்சனம்!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளதாகவும் தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பாதையை மீள ஆரம்பிப்போம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நாட்டின் நலன் கருதி ஜனாதிபதித் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1704705358.png

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைசார் வல்லுநர்களை இணைத்து ஒரே அரசியல் கட்சியில் மற்றும் ஒரு சின்னத்தில் போட்டியிட வைக்கும் முனைப்பில் தாம் செயற்பட்டு வருவதாகவும் தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் சொத்துக்களை திருடிய அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எவ்வாறு சொத்துக்களை திரட்டினார்கள் என்பதை தாம் பகிரங்கப்படுத்துவோம் என்றும் தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!