இன்று முதல் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகளில் மாற்றம்!

#SriLanka #Death #Prison #Lanka4 #Fever #prisoner #online
Mayoorikka
1 year ago
இன்று முதல் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகளில் மாற்றம்!

மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், காலி சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படும் புதிய கைதிகள் அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக கடந்த 3ஆம் திகதி உயிரிழந்தார்.

 இதன் காரணமாக குறித்த சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 அத்துடன், காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டுள்ள மேலும் எட்டு கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதன் காரணமாக, இன்று முதல் காலி சிறைச்சாலையின் நடவடிக்கைகள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!