போலி நாணயத் தாள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்க முற்பட்ட இருவர் கைது!
போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து போதைப்பொருள் வாங்க பயன்படுத்திய இருவரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களிடம் இருந்து 4 போலி 1000 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், கரன்சி அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டரும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்களால் அச்சிடப்பட்ட போலிப் பணத்தை பல்வேறு முறைகளில் வேறு பணத்துடன் மாற்றி பின்னர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கிட்டத்தட்ட 50,000 ரூபாவை கைமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை அளுத்கடை இலக்கம் 04 இல் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.