முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் 18 வயது இளைஞர்கள் இருவர் கைது!
#SriLanka
#Arrest
#Mullaitivu
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முல்லைத்தீவிலுள்ள புதுக்குடியிருப்பில் பொலிஸார் நடத்திய சோதனையில், ஐஸ் போதைப் பொருட்க்கள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு 02 ஆம் வட்டாரம் கோம்பாவில், கர்ணன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பின்னால் இயங்கும் நபர்கள் குறித்தும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் பலர் பிடிபட வாய்ப்புக்கள் உள்ளத்காகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பிடிப்படுவதும் பின்னர் அவர்கள் பணத்தை காட்டி விடுவிக்கப்படுவதும் வழமையான ஒரு விடயம் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.