சீமெந்துக்கு 03 வீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்றபோதிலும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #cement
Thamilini
1 year ago
சீமெந்துக்கு 03 வீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்றபோதிலும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

சீமெந்திற்கு 03 சதவீதம் வற் வரி விதிக்க வேண்டும் என்றபோதிலும், உற்பத்தியாளர்கள் அதற்கு அதிகமாக வரி விதித்துள்ளதாக  தேசிய தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

50kg சீமெந்தின் விலை 300 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 2450 ரூபாவாகும். 18 வீத வற் வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய தொழிலாளர் சங்கம், கட்டுமானத்துறை தற்போது ஓரளவு வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ள  நிலையில், புதிய விலை அதிகரிப்பானது, மேலும் சுமையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

சீமெந்தின் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என வலியுறுத்தியுள்ள அச்சங்கத்தின் தலைவர் சுபுன் அபேசேகர, மேற்படி குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!