இந்திய மருந்துகளை இறக்குமதி செய்யவில்லை என்றால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் - கெஹலிய!
#India
#SriLanka
#Keheliya Rambukwella
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்திய மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய தாம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இந்நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி பிரிமத்தலாவ பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் இருந்து 407 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் 04 வகையான மருந்துகள் மட்டுமே தரம் குறைந்தவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.