கடந்த 04 நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!
#SriLanka
#Tourist
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தரவுகளின் படி, 5060 பேர் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளனர். அதேநேரத்தில், 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.