இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

#India #SriLanka #sri lanka tamil news #Lanka4_srilanka_tamil
Soruban
1 year ago
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

images/content-image/1704541967.jpg

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் இலங்கையில் நடைபெற்றது. இன்று 6ஆம் திருகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழருடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டை தாண்டி வேறு ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் மற்றும் நடிகர் நந்தா, சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ்,செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

images/content-image/1704541992.jpg

 தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்த்தின் வழிகாட்டலில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றது. இதன் போது காளைகள் சீறிப்பாய்ந்ததுடன், காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

images/content-image/1704542016.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!