யாழ்.பல்கலைக் கழக மாணவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4 #University
Mayoorikka
1 year ago
யாழ்.பல்கலைக் கழக மாணவர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 இதன்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு சுட்டிக் காட்டப்பட்டது.

 மாணவர்களின் விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் இதன்போது மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!