தெற்கு அதிவேக வீதியில் நடைபெற்ற விபத்தில் ரஷ்ய பிரஜை மரணம்

#SriLanka #NorthernProvince #Death #Accident #people #Russia #Highway #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
தெற்கு அதிவேக வீதியில் நடைபெற்ற விபத்தில் ரஷ்ய பிரஜை மரணம்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ் தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மாற்றுப்பாதைக்கு அருகில் 110.6 ஆம் மைல் கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ் சாரதி உறங்கியதால் அதே திசையில் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்ஸின் முன் பகுதியில் இருந்த ரஷ்ய பிரஜை படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸின் முன் பகுதியில் இருந்த மற்றொரு வெளிநாட்டு தம்பதியினர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!