கடவத்தை இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

#SriLanka #Arrest #Murder #drugs #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
கடவத்தை இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கடவத்தை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று ஹெரோயினுடன் கைது செய்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்த, வேபட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 24.03.2022 அன்று கடவத்த பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்ட இரட்டைக் கொலைக்கு இவரே உதவியதாகத் தெரியவந்துள்ளது.

 வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!