இலங்கையில் முதன் முறையாக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி!
#SriLanka
#Trincomalee
#Festival
#Lanka4
#sports
Mayoorikka
1 year ago
தமிழகத்தில் பிரபலமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி முதல் முறையாக திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை (7) மற்றும் நாளை மறுதினத்திலும் (8) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் முதலாவதாக சம்பூர் பத்ரகாளியம்மன் கோயில் மாடு களத்தில் இறக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 300 இற்கும் மேற்கட்ட மாடுகள் பங்கேற்றுள்ளன.
குறித்த ஜல்லிக்கட்டு போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பு அதிதிகளாகவும் பங்கேற்றுள்ளனர்.