சாதனை படைத்த மலையக பெண் கவிஞர் ஷாருலதா
#India
#SriLanka
#Tamil Nadu
#Women
#WorldRecord
#competition
#Malayagam
#lanka4Media
#lanka4.com
#poet
Prasu
1 year ago
தமிழ் தொண்டன் பைந்தமிழ் சங்கம் மற்றும் நிலாவட்டம் இலக்கிய அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த 100 கவிஞர்களின் தலா 100 கவிதைகள் கொண்ட "பத்தாயிரம் கவிதைகள்" அடங்கிய "கவித்தேனருவி" எனும் கவிதை தொகுப்பு நூலானது தமிழ்நாட்டில் இயங்கி வரும் NOBAL WORLD RECORD PVT LTD எனும் சாதனைகளை பதிவு செய்யும் நூலில் இடம் பிடித்துள்ளது.
குறித்த கவிதை நூலில் மலையகத்தைச் சேர்ந்த பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்களின் "எண்ணத்தின் கிறுக்கல்கள்' எனும் கவிதை நூலும் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.
குறித்த சாதனை நிகழ்வானது 2023 நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இந்தியா - வடசென்னையில் இடம் பெற்றது.
தன்னுடைய பெயரை இவ் சாதனை புத்தகத்தில் நிலைநிறுத்திய கவிஞருக்கு Lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.