ரணில் நினைத்தாலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமே இல்லை! ஏன்? (லங்கா4 இன் பிரத்தியேக செய்தி)

#SriLanka #Sri Lanka President #Election #Tamil People #Prison #Ranil wickremesinghe #Lanka4 #prisoner
Soruban
1 year ago
ரணில் நினைத்தாலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  சாத்தியமே இல்லை!   ஏன்? (லங்கா4 இன் பிரத்தியேக செய்தி)

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தொற்று நோயால் இதுவரை 11 தமிழ்க் கைதிகள் இறந்துள்ளனர்.

 இப்பொழுது சிறைச்சாலைகளில் நோய்வாய்பட்டு அவதிப்படுவோரும் உள்ளனர்.

 இவர்களை விடுதலை செய்யவேண்டுமென இன்று யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 ரணிலால் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி விருப்பின் பேரில் விடுதலை செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டார். 

செய்யவும் முடியாது. அவர் தனது பதவியை இழக்க முடிவுசெய்தால் அது சாத்தியம். சில வேளையில் ரணில் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அடுத்த தேர்தலில் இவ்விடுதலையை வைத்தே சஜித், ராஜபக்சே தரப்பு ரணில் புலிகளுக்கு ஆதரவாக செயற்ப்படுகிறார் என பிரச்சாரம் செய்வது உறுதி. 

 ரணிலுடன் இருக்கும் முஸ்லீம் கட்சிகள் மற்றும் தமிழ், சிங்கள கட்டிகளும் ஆதரவு துண்டிக்கப்படும். அதனால் ரணில் நினைத்தாலும் அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தினாலும் விடுதலை அசாத்தியமே. 

 சட்ட அணுகல் அல்லாது இவர்கள் விடுதலை சாத்தியம் இல்லை. சில வேளைகளில் ஆட்சி மாறினாலும் விடுதலை என்னும் பதத்துக்கு விடுதலை இல்லை எனலாம். பொதுவாக இவர்கள் அனைவரும் பிற கட்சிகளோடு கயிற்று இழை போல பின்னி இருப்பதாலும் எதிர் தரப்பு மற்றும் துவேச ஆன்மீகவாதிகளின் முட்டுக்கட்டை இங்கே உண்டு. 

 ஆனால் கைதிகள் விடுதலை ஆகவேண்டும் என்பதே எமது விருப்பமுமாகும். அவர்கள் தவறு செய்திருந்தாலும் அதன் ச ந்தர்ப்பங்கள், சூழல்களின் அடிப்படையிலும், அவர்களின் வயதடிப்படையையும் வைத்து மன்னிப்போடு விடுதலையை நீதிபதியால் மட்டுமே இயலும். 

 செய்வாரா? சாத்தியமா? செய்தால் முதல் ஆதரிப்பது எமது lanka4 ஊடகமே. 

 செய்தி:- 

lanka4 ஊடகம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!