யாழில் கில்மிஷாவை சந்தித்த ஜனாதிபதி கொழும்புக்கு வருமாறும் அழைப்பு!

#SriLanka #Sri Lanka President #Jaffna #Meeting #Ranil wickremesinghe #Lanka4 #Visit #Music
Mayoorikka
1 year ago
யாழில் கில்மிஷாவை சந்தித்த ஜனாதிபதி கொழும்புக்கு வருமாறும் அழைப்பு!

யாழில் நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் zee தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். 

 அத்தோடு கொழும்பில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக கிஷ்மிஷா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

 நாடு திரும்பிய பின்னர் தன்னை வந்து கொழும்பில் வந்து சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

 தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது கில்மிஷாவை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். கில்மிஷா ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளார். 

images/content-image/2023/01/1704427535.jpg

 இதேவேளை கில்மிஷாவை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்தியாவின் சீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம ப லிட்டில் சம்பியன் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

 கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்காலக் கல்வி மற்றும் இசை வாழ்வில் வெற்றிபெற தனது ஆசிகளையும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!