இலங்கைக்கு வந்துள்ளாரா விஜய்? வெளியாகியுள்ள தகவல்
#SriLanka
#Jaffna
#Tamil Nadu
#Actor
#TamilCinema
#Film
#Lanka4
#Vijay
Mayoorikka
1 year ago
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 – GOAT திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் இதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘இடம் ’ பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இன்று நான்காம் திகதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பல்வேறு இடங்களில் குறுகிய காலத்துக்குள் இந்த படப்பிடிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

படப்பிடிப்பு இடம்பெறவுள்ள இடங்களில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதைப் போன்று, நடிகர் விஜயின் இலங்கை வருகையும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய் இலங்கை வந்துவிட்டாரா? இல்லையா என்பது குறித்த விபரங்கள் கூட இன்னும் வெளியாக்கப்படவில்லை.