யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!
நான்கு நாள் விஜயம் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உலங்கு வானூர்தியில் குருநகர் செம்யேம்ஸ் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர், வடக்கு ஆளுநர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றதை தொடர்ந்து ஐனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்கலந்து கொண்டார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்தார் -என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.