தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்!
#SriLanka
#Bandula Gunawardana
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
போக்குவரத்துத் துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரயில், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று வழங்கியுள்ளேன்.
இதன்மூலம் நியாயமான விலைக் கொள்கையை அங்கு ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.