வற் வரி தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! ஜனாதிபதி ஆலோசகர் எச்சரிக்கை
நாடு ஸ்தரமடைந்துள்ளது. எதிர்காலத்தை நம்பும் நிலைக்கும் வந்துவிட்டோம். மறுசீரமைப்புக்கு அமைய நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வரும் போது மக்களின் வருமானம் அதிகரிக்கும்.
எமது பயணத்தை விரைவுப்படுத்த அதிக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வற் வரி தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடு இன்று ஸ்தரமடைந்துள்ளது. எதிர்காலத்தை நம்பும் நிலைக்கும் வந்துவிட்டோம். மறுசீரமைப்புக்கு அமைய இந்த நம்பிக்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
வற் அதிகரிப்பால் எமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மறுசீரமைப்பின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வரும் போது மக்களின் வருமானமும் அதிகரிக்கும். எனவே வருமானம் அதிகரிக்கும் போது இதற்கு முன்னர் காணப்பட்ட அழுத்தங்கள் குறைவடையும்.

எங்கள் பயணத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்பதே எமது நம்பிக்கை. அதற்கு நாம் அதிக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வற் வரி தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு நடவடிக்கை எடுப்போம்.இவர்கள் மக்களை குழப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும், எமது இலக்கை எல்லாம் அடைய ஸ்திரமான நாடு வேண்டும். ஸ்திரமான அரசாங்கம் வேண்டும். நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் சரியான தொடர்புகள் காணப்பட வேண்டும். இருப்பினும் அரசியல் ரீதியாகவும் தேர்தலை இலக்கு வைத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போது எமது பயணம் இடை நடுவில் நின்று விடும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கமைவாக செயல்பட வேண்டும். தேர்தல் இடம்பெறும் போது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியும். எனவே அதுவரையில் நாம் தற்போது நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றார்.