புதிய VAT வரி திருத்தத்தின் மூலம் பணவீக்கம் வேகமாக அதிகரிக்கும் அபாயம் : பொருளாதார நிபுணர்கள் கருத்து!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Vat
Thamilini
1 year ago
புதிய VAT வரி திருத்தத்தின் மூலம் பணவீக்கம் வேகமாக அதிகரிக்கும் அபாயம் : பொருளாதார நிபுணர்கள் கருத்து!

புதிய VAT திருத்தத்தின் மூலம் பொருளாதாரம் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.  

இந்த VAT திருத்தத்தின் மூலம் பணவீக்கம் வேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT வரியை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதன்படி, தற்போதைய 15 சதவீத VAT நாளை முதல் 18 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதுடன், VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பல பொருட்கள் மற்றும் சேவைகளும் VATக்கு உட்பட்டுள்ளன.  

இந்த வரி திருத்தத்தின் மூலம் சந்தையில் பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார். 

VAT வரியை அமுல்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் பிரச்சினைக்குரியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை  VAT திருத்தப்பட்ட உடனேயே சந்தையில் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.  

எனினும் இவ்வாறான வரிகளை விதிக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை பேண முடியாது எனவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!