புதுவருடத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!
புத்தாண்டை முன்னிட்டு (01.01.2024) அனைத்து அரச ஊழியர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் உள்ளுராட்சி மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை உரத்த குரலில் ஓத வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.