சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு உயரிய விருது

#India #world_news #Award #Space #Iceland #Chandrayaan
Prasu
1 year ago
சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு உயரிய விருது

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. 

இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கவுரவித்து இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது.

இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!