ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் இந்திய பிரதமர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் கானபெரென்ஸ் காலில் தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், பரஸ்பர வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்புத் தலைவர்களும் வரவேற்றனர்.
இது தவிர, உக்ரைனில் நீண்டகாலமாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரு தரப்பினரின் முயற்சிகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. மோதலுக்கு அமைதியான தீர்வு கண்டு ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வெளிப்படுத்தினார்.
மேலும், அடுத்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை பிரதமர் மோடி அழைத்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



