கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள்!

#SriLanka #Protest #Airport #Katunayaka
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

 இதன்போது விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. 

எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இன்று இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்றார்.

 எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.

 இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!