இலங்கைக்கு அடுத்தடுத்து படையெடுக்கும் சீன கப்பல்கள் - கடும் அதிருப்தியில் இந்தியா!

#India #SriLanka #China #Ship
PriyaRam
2 years ago
இலங்கைக்கு அடுத்தடுத்து படையெடுக்கும் சீன கப்பல்கள் - கடும் அதிருப்தியில் இந்தியா!

இலங்கைக்கு அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1702632663.jpg

குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கு கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்திய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!