மயிலத்தமடு மாதவனையில் பரபரப்பு - கஜேந்திரகுமாரைத் தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவம் குவிப்பு!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியை பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸார் இன்று அனுமதி வழங்கியிருக்கவில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும்பாலான பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பினருக்கு மேய்ச்சல் தரை பகுதியை பார்வையிடுவதற்கு அனுமதியை வழங்கியிருக்கவில்லை.
இதன்போது, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அந்த பகுதிக்கு பிரவேசித்த நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பினருக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையிலேயே அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.