சீன வெள்ளைக் குதிரை ஆலய வளாகத்திற்குள் இலங்கை பாரம்பரிய பௌத்த விகாரை!
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பௌத்த தத்துவம் மற்றும் கலாசார பரிமாற்றத்திற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன தூதுக்குழுவினருடன் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவில் உள்ள வெள்ளைக்குதிரை ஆலய வளாகத்தில் இலங்கையின் பாரம்பரிய பௌத்த விகாரையை நிர்மாணிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் தொல்பொருள் பரிமாற்றத் திட்டங்கள், சுற்றுலா மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சீன தூதுக்குழுவினருடன் கலந்துரையாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.