சீன கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் இலங்கை!
#SriLanka
#China
#Agreement
PriyaRam
2 years ago
பசுமை திட்டமிடல் வலயங்களை உருவாக்குவதற்கு சீன கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முதலீட்டு வலயங்களும் பசுமை முதலீட்டு வலயங்களாக மாற்றப்படும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த வருட இறுதிக்குள், சீன கல்வி நிறுவனத்தின் மூலம் மூன்று முதலீட்டு வலயங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பசுமை திட்டமிடல் வலயங்களாக மாற்றப்படும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.