மகிந்தவிடமிருந்து மக்களுக்கு இன்று வரவுள்ள முக்கிய செய்தி!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். மேலும்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டோம். அரசமைப் பின் ஊடாக தீர்வு கண்டுள்ளோம் கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என் பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற வுள்ளது.
ராஜபக்ஷர்களின் மீளெழுச் சியை கண்டு எதிர்க்கட்சியினர் அச்ச மடைந்துள்ளார்கள். சமூக வலைதளங் களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷமீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரின் தலைமையிலான அரசாங்கத்தை கோருகிறார்கள்.
இன்றைய தேசியமாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார். அறகலய என்று கூறிக்கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்தார். அதனால்தான் பெரும் நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார்.
நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
ஜனாதிபதியின் வரி
விதிப்பு கொள்கைக்கு துணை போகக்கூடாது என்பதற்காக வற் வரி மீதான
வாக்கெடுப்பில் நான் கலந்து கொள்ள வில்லை என்றார்